Monday, May 26, 2014

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்

மூலவர்:சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: இலுப்பை
தீர்த்தம்:பாணதீர்த்தம்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:காரையார்
மாவட்டம்: திருநெல்வேலி
மாநிலம்: தமிழ்நாடு




திருவிழா:

ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, பங்குனி உத்திரம்.

 தல சிறப்பு:

முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை

Wednesday, October 5, 2011

கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்

கருணை வழிக்காட்டி கல்வியை வாழச்செய் : சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம்பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.

Tuesday, October 4, 2011

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?



அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

Saturday, October 1, 2011

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள். இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

1. முதலாம் படி :-

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்களின் பொம்மைகள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

Monday, September 26, 2011

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

சாயந்திரம் ஆச்சுனா, சரக்கு. இடையிலே, மொபைல் ல - எஸ் ஹனி , லவ்   யூ செல்லம் னு - ஒரு நாலு பேருக்கிட்ட பேச்சு. கட்டின பொண்டாட்டி பேசுறப்போ , மீட்டிங் முடிய போகுது கண்ணு. இதோ வந்துடறேன் .... 
இது தான் இன்னைக்கு மாடர்ன் யூத் பண்ணிக்கிட்டு இருக்கிற , ஒரே வேலை. நல்லா சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் , காசு பார்த்திட்டு - ஒரு   ரெண்டு , மூணு பொண்ணுங்க , அவன் பின்னாடி சுத்தும். காசுக்குத்தான்னு தெரியும் , இவருக்கும். இருந்தாலும், இவரும் அதை தொடர்வார். கட்டின பொண்டாட்டி தவிர, எல்லா பொண்ணுங்களுமே , எதோ ஒரு வகையிலே - இவரை இம்ப்ரெஸ் பண்ணுவாங்க.. ! இப்படியே வண்டி ஓடும்.     

சிட்டில பாதி இளைஞர்கள் இப்படித்தான். மீதி பேரு , இப்படி இருந்தா , நல்லா இருக்குமேன்னு நினைக்கிற இளைஞர்கள். 


தத்வமசி  னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும்.